பின்தொடர்பவர்கள்

Friday, October 9, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்

பிள்ளை நலன் கருதி தாய் தந்தையர் தமது நலன்களையெல்லாஞ் சுருக்கிக் கொள்கின்றனர். பிள்ளைப் பேற்றால் தன்னலம் கெடுதலும் தியாகம் எழுதலும் காண்க. அன்புத்தொண்டு - தன்னலமின்மை - தியாகம் - முதலியன, பொறாமை, வெகுளி, அவா முதலிய மனமாசுகளைத் துடைப்பனவல்லவோ? மாசகன்ற இடத்திலன்றோ இன்பப்பேறு உண்டாகும்? எனவே, பிள்ளைப்பேறு இன்ப வாழ்விற்கு இன்றியமையாதது என்பது கருதற்பாலது.

-திரு.வி.கலியாணசுந்தரனார்.
(பெண்ணின் பெருமை - பக். 246)

No comments:

Post a Comment