Tuesday, October 6, 2009

புதுக்கவிதை - 21


தேர்தல் அகராதி - 2

* வாக்காளர்:
யார் ஜெயித்தாலும்
எப்போதும்
ஒட்டாண்டி.

* தேர்தல் நிதி:
நல்ல பணமாகும்
கள்ளப்பணம்.

* பணம்:
தேர்தல் என்னும்
நான்கெழுத்தில்
வேட்பாளர் என்னும்
ஐந்தெழுத்து
வெல்ல உதவும்
மூன்றெழுத்து.

* அன்பளிப்பு:
வாக்காளருக்கு
பரிசுப்பொருள்.
எதிரணியினருக்கு
நன்கொடை.
கட்சித்தலைமைக்கு
நேர்த்திக்கடன்.

* வாக்கு:
தேர்தலில் வெல்ல
தேவைப்படுவது.
நரம்பில்லா நாக்கால்
வழங்கப்படுவது.

* கள்ள ஓட்டு:
நல்ல ஓட்டுக்கு
எதிர்ப்பதம்.
மாலையில் அதிகம்
புழங்குவது.
போட இயலாதவர்கள்
புழுங்குவது.

* நல்ல ஓட்டு:
அதிகாலையிலேயே
வாக்குச்சாவடி வந்தும்
அடையாள அட்டையின்றி
திரும்பும் வாக்காளர்.

* அகராதி:
மேடையில் முழங்கும்
உற்சாக வார்த்தைகள்
இடம்பெறக் கூடாத
இடம்.

No comments:

Post a Comment