Thursday, October 8, 2009

புதுக்கவிதை - 22


விதி

விதியில் இரண்டு வகை:
நாமே வகுத்த விதி,
நம்மை வகுக்கும் விதி.

நம்மை நெறிப்படுத்த
நாமே வகுப்பது விதி
மதியால் வகுப்பது விதி
மனிதம் காப்பது விதி.

நாமே விதித்ததை
நாமே மீறினால்
நாமே குற்றாவாளி.
விதியை மீறினால்
தண்டனை விதி.

விதியை மறந்தால்
மாறும் உன் விதி.
இதுவே நம்மை
வகுக்கும் விதி.

விதியை பிறகு
மதியால் வெல்லலாம்.
முதலில்
விதியை மதி.

No comments:

Post a Comment