Sunday, October 4, 2009

புதுக்கவிதை - 19



காற்றின் ரகசியம்

காற்றுக்கென்ன வேலி?
திரைப்பாடல் காற்றில் மிதந்து வந்தது.
காற்று நிரம்பிய பலூன்
வானில் பறந்து சென்றது.
காற்றுக்குமிழிகளை
சோப்பு நுரையில் விட்டு
குதூகலித்தன குழந்தைகள்.
மனம் காற்றாகிவிட்டது.

தென்றலாக வருடும் காற்றில்
புயலின் மையம்
கருக்கொள்வது எப்படி?
அடங்கிக் கிடக்கும் காற்று
புழுக்கத்தையும்
மாறி வீசும் காற்று
ஜலதோஷத்தையும்
உருவாக்குவது எப்படி?

எது எப்படியோ,
இந்தக் கவிதையே
காற்றால் தான்
எழுதவும் படிக்கவும்
படுகிறது.
நன்றி: விஜயபாரதம்
(03.11.2000)

No comments:

Post a Comment