பின்தொடர்பவர்கள்

Thursday, October 1, 2009

மரபுக் கவிதை - 24கனவு மெய்ப்படட்டும்!

அன்பினால் அகிலத்தை
ஆள்கின்ற தெம் நாடு!
அமைதியை பாருக்கு
அளித்திடும் எம் நாடு!
பழமொழிகள் பேசிடினும்
பண்பாட்டில் நாம் ஒன்றே!
பல சமயம் இருந்தாலும்
பாரதீயர் நாம் ஒன்றே!

அறிவினால் அகிலத்தை
ஆள்கின்ற தெம் நாடு!
அரத்தினால் சிறப்புற்ற
அன்னை எம் தாய்நாடு!
பாரின் தலைவனென
பாரதமே வழிகாட்டும்!
பாரதியின் கனவு இது
பலித்திடவே பணி புரிவோம்!

கனவு மெய்ப்படட்டும்!
கவலைகள் மறையட்டும்!
தாய்நாடு உயரட்டும்!
தரணியும் மேம்படட்டும்!

No comments:

Post a Comment