பின்தொடர்பவர்கள்

Wednesday, October 7, 2009

மரபுக்கவிதை - 28


படுகுழி

தானே தனக்கு வெட்டும் குழிஎது ?
தம்பி நீதான் சொல்வாய்!
'நானே செய்தேன்' என்னும் அகந்தை
தானே படுகுழி அண்ணா!

வீணே பேசும் பேச்சென எதனை
விரைவில் சொல்லேன் தம்பி!
வீணர்களிடையே சொல்லும் எதுவும்
வீணே, அண்ணா வீணே!

சானே ஏறி முழம் சறுக்குவதை
சடுதியில் விளக்கேன் தம்பி!
ஊனை மதித்து உயிரை மிதித்து
உழலும் வாழ்வே அண்ணா!


No comments:

Post a Comment