Saturday, September 5, 2009

ஏதேதோ எண்ணங்கள்

ஆவினுக்கு 'பால் ' ஊற்றுகிறார்கள்!
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை ஏற்றியுள்ளது தமிழக அரசு. அதன் விளைவாக அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமான 'ஆவின்' பால் விலையை உயத்தி இருக்கிறது. குறைந்த பட்சம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதில் விவசாயிகள் திருப்தி அடையவில்லை என்பது தான் நிஜம்.
பசு வளர்ப்பது விவசாயிகளின் முக்கிய வருவாய் ஆதாரம். வானம் பார்த்த விளைச்சலை நம்பி, இடுபொருள் வாங்கி சாகுபடி செய்யும் விவசாயிக்கு சந்தையில் நியாயமான விலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் வரவுக்குப் பதிலாக நஷ்டம் தான் ஏற்படுகிறது. அத்தகைய கையறு நிலையில் விவசாயிக்கு கை கொடுப்பது பசு தரும் பால் தான்.
பசுந்தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்ற இடுபொருட்களுக்கு செலவழித்து, காலை- மாலை பார்க்காமல் மேய்ச்சலுக்கு விட்டு காவல் இருந்து, பால் கறந்து விற்றால் விவசாயிக்கு கிடைப்பது லிட்டருக்கு வெறும் ரூ. 13.54 மட்டுமே. இதே பால் , பதப்படுத்தப்பட்ட நிலையில் ரூ. 25 வரை விற்கப்படுகிறது; இடையில் பத்து ரூபாய் எங்கே போகிறது?
போக்குவரத்து, பதப்படுத்தும் செலவு, லாபம் என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட சரிபாதிக்கு சற்றே குறைவான நிலையில் வித்தியாசம் இடிக்கிறதே?
அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவின் சம்பாதித்தால் நல்லது தான். ஆனால் இதில் அதிக அளவில் கொழிக்கப் போவது தனியார் நிறுவனங்கள் தானே ! தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி இருந்தன. தற்போது அரசு அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் விலை உயர்த்தி உள்ளன.
மொத்தத்தில் அரசு அறிவிப்பால், லிட்டருக்கு ரூ. இரண்டு மட்டுமே விவசாயிக்கு லாபம். ஆவினுக்கோ லிட்டருக்கு ரூ. 4 லாபம். தனியாருக்கு ரூ. ஆறு வரை லாபம்!
தனியார் தரும் கொள்முதல் விலையை ஆவின் தராது. அதே சமயம் தனியார் அதிக லாபம் பெறவும் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் விளைவு எப்படி இருக்க pokirathu ?
மொத்தத்தில் saathaarana makkalukkum பயன் இல்லை. அரசு vivasaayi vayitrilum பால் vaarkavillai; ஆவினுக்கு தான் 'பால் ' ootri இருக்கிறது.

No comments:

Post a Comment