பின்தொடர்பவர்கள்

Friday, September 4, 2009

புதுக்கவிதை - 2


முரண்

ஊரெங்கும்
ஊரடங்கு போல்
அடைத்துக் கிடக்கின்றன
எல்லாக் கடைகளும்
தொழிற்சாலைகளும்.

போன வருடம்
சேது சமுத்திரத் திட்டத்துக்காக;
இந்த வருடம்
இலங்கைத் தமிழருக்காக.

சாயாக் கடைகளும் கூட
இல்லவே இல்லை.

விடுதியில் தங்கி
வேலைக்குச் செல்பவர்கள்
வேறு வழியின்றி
உண்ணாவிரதம்.

'டாஸ்மாக்' கடைகளில்
மட்டும்
ஜெக ஜோதியாக கூட்டம்.

No comments:

Post a Comment