பின்தொடர்பவர்கள்

Friday, September 4, 2009

மரபுக்கவிதை - 2


பாரதத்தின் திசை நோக்கி...

பல்கலைகள் கற்றிடவும் பண்பாட்டில் உயர்ந்திடவும்
பல்துறையில் மிளிர்ந்திடவும் பணி புரிந்து உய்ந்திடவும்
பலநாட்டு இளைஞர்களும் படையெடுத்து வருகின்றார்-
பாரதத்தின் திசை நோக்கி! பாரதத்தின் திசை நோக்கி!

வாழ்வை உணர்ந்திடவும் வாழ்க்கை வளம் பெறவும்
வாட்டம் போக்கித் தன் நாட்டைக் காத்திடவும்
பல நாட்டு இளைஞர்களும் படையெடுத்து வருகின்றார்-
பாரதத்தின் திசை நோக்கி! பாரதத்தின் திசை நோக்கி!

அதிகாலைக் கனவு இது! அற்புத நற்கனவு இது!
இனிதாக மெய்ப்படட்டும்! இனிதாக மெய்ப்படட்டும்! !


No comments:

Post a Comment