ஸ்ரீ ராமன்
பெற்றோரின் சொற்கேட்டு,
பெரியோரை வணங்கிட்டு,
பற்றற்ற முனிவோரின்
பண்பான தாள் பணிந்து,
கற்றதனை, அதன் பயனை
குரு வணங்கி நிலைநாட்டி,
உற்றாரை, உறவினரை
உவப்புடனே உபசரித்து,
சற்றேனும் வெகுளாமல்
சாந்தி மிக முறுவலித்து,
குற்றங்கள் அற்றிடவே
குன்றான விற்பிடித்து,
வெற்றியென ஆர்ப்பரிக்கும்
தோளுயர அம்பெடுத்து,
பொற்றாமரைக் கண்ணால்
புன்னகைப்பான் ஸ்ரீ ராமன்!
நன்றி: விஜயபாரதம் (19.03.1999)
இன்று ஸ்ரீராம நவமி.
.
2 comments:
ஐயா,
// பொற்றாமரைக் கண்ணால் //
இந்த உவமை சரியா? பல நாள் சந்தேகம். அறிய ஆவல்
நண்பரே.
பொற்றாமரை என்பது ஒரு உருவகம். சூரியனைக் கண்ட தாமரை மலர்வது போல, என்றும் மலர்ச்சியுடன் திகழ்வது ஸ்ரீ ராமனின் கண்கள் என்பதே பாடல் வரியின் உட்கருத்து. மனதில் தெளிவும் வலிவும் உள்ளவர்களின் கண்கள் என்றும் ஒளி பொருந்தியவையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
-வ.மு.முரளி.
Post a Comment