பின்தொடர்பவர்கள்

Wednesday, March 31, 2010

புதுக்கவிதை - 84


ஏனோதானோ

யாரையும்
சுட்டுக் கொல்கிறார்கள்
காவலர்கள்.எங்கேயும்
கை நீட்டுகிறார்கள்
அதிகாரிகள்.எதையும்
தீர்ப்பளிக்கிறார்கள்
நீதிபதிகள்.எப்படியும்
தப்பி விடுகிறார்கள்
மக்கள் பிரதிநிதிகள்.எதற்கும்
துணிந்துவிட்டார்கள்
பத்திரிகையாளர்கள்.எப்போதும்
இருக்கிறார்கள்
விபசாரிகள்.ஏன்தானோ
வாழ்கிறார்கள்
மக்கள்?
நன்றி: விஜயபாரதம் (06.08.10)

.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

ஏன்தானோ
வாழ்கிறார்கள்
மக்கள்? ஏனோதானோவென்று வாழும் ஒரு வாழ்க்கை !

Post a Comment