பின்தொடர்பவர்கள்

Monday, March 8, 2010

உருவக கவிதை - 40


நித்யானந்தம் - 5

தராதரம்

ஆடு நனைகிறதென்று
ஓநாய் அழுகிறது.
விழுங்கிய குட்டியை எண்ணி
கண்ணீர் விடுகிறது முதலை.
பயிரை மேய்ந்த வேலி
தராதரம் பேசுகிறது.
முதுகில் குத்திய கட்டாரி
ஞானோபதேசம் செய்கிறது.
சிக்கியவனை எச்சரிக்கிறது
ஆடி முடித்த தேகம்.

ஊரை விழுங்கிய பெருச்சாளி
மூஞ்சுறுக்களை மிரட்டுகிறது.
ஆபாசக் களஞ்சியம்
நாகரிகம் பேசுகிறது.
மொத்தத்தில்
வேதம் ஓதுகிறது சாத்தான்.

எது எப்படியோ
செய்தியிடை காட்டப்பட்ட
நீலப்படம் நின்றுவிட்டது.

காண்க: துரியன் சபதம் (07.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/39.html

1 comment:

Anonymous said...

சாட்டையடி கவிதை நண்பரே. நித்யானநதாவை வைத்துக் கும்மியடிக்கும் உளுத்தர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

அன்புடன்
ச.திருமலை

Post a Comment