பின்தொடர்பவர்கள்

Saturday, March 6, 2010

உருவக கவிதை - 38


நித்யானந்தம் - 3

என்றும் இன்பம்

உங்கள் பெயரை உடனே மாற்றுவது
உத்தேசமாக நல்லது.
கோஷமிட்டு கொடி பிடிக்க
பக்தகோடிகள் தயார்!

உங்களுக்கென கட்சி துவங்குவது
உறுதியாய் நல்லது.
கூட்டணி அமைத்தால்
குற்றங்கள் மறையும்.

என்றும் இன்பத்துக்கு இன்றே மாறுங்கள்.
'என்றும் இன்பன்' ஆகுங்கள்!
கூடவே இருக்கிறார் கொ.ப.செ.

கட்சியின் பெயரில் 'கழகம்' இருக்கட்டும்.
சொத்துக்கள் கூடும்; சோகம் தொடராது.

'பகுத்தறிவை விட
பட்டறிவு மேலானது' -
அடுத்த புத்தகத்துக்கு
தலைப்பும் தயார்!

காண்க: பொது மாத்து (05.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/37.html

1 comment:

ஜெயக்குமார் said...

கலக்கல் கவிதை..ஒவ்வொன்றும் நெத்தியடி.. நித்யானந்தத்தின் வழிகாட்டிகூட இவ்வளவு நல்லவிதமாய் சொல்லித்தர இயலாது..

:-)

Post a Comment