Thursday, February 18, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

சமன் குலைக்கும் அனுபவங்களே படைப்பிலக்கியத்துக்கான சீண்டலை அளிக்கின்றன. படைப்பிலக்கியம் என்பதேகூட, அவ்வனுபவத்தைச் சமன்படுத்திக் கொள்வதற்கான யத்தனமேயாகும். அவ்வனுபவத்தை அதுவரை நாம் பெற்ற அனுபவங்களின் நீட்சியாகப் பொருத்திக் கொள்கிறோம். நம்முள் உள்ள அகநிலைக்காட்சியில் அதை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். அதை விதையாக ஆக்கி நம் ஆழ்மனதுக்கு அனுப்பி, அது மரமாக மீண்டுவரச் செய்கிறோம். அதுவே இலக்கியமாகும். சிப்பிக்குள் விழுந்த தூசு அதன் சதைச்சாறால் முத்தாவதுபோல படைப்பாகிறது அவ்வனுபவம்.
-ஜெயமோகன்
(எழுதும் கலை- பக்:76 )

.

No comments:

Post a Comment