பின்தொடர்பவர்கள்

Saturday, February 13, 2010

மரபுக் கவிதை - 72உடன் வரும் ஈசனே!


தாயிடம் கனிந்திடும் பாசமே!
தந்தையாய் மலர்ந்திடும் வாசமே!
மனைவியின் அறுபடா நேசமே!
மகளாய் அணைத்திடும் ஈசனே!

உருக்கெனச் சுடர்விடும் தேகமே!
உறுதுணையாய் வரும் நண்பரே!
குருவின் நல்வழி காட்டலே!
குவலயம் காத்திடும் ஈசனே!

கல்வியை நல்கிடும் ஞானமே!
பல்வகை வளத்தின் கூடலே!
நல்லவை நாடும் உள்ளமே!
நன்மையைப் பொழிந்திடும் ஈசனே!

இல்லம் ஒளிரும் ஜோதியே!
இன்பம் மிளிரும் ஆதியே!
துயரம் போக்கிடும் நாதனே!
துணையாய் உடன் வரும் ஈசனே!
.

No comments:

Post a Comment