பின்தொடர்பவர்கள்

Tuesday, February 2, 2010

உருவக கவிதை - 27பழையன கழிதலும்...பிச்சைக்காரன் கூட
பிசைக்காரனென்று
ஏசுவான்-
பத்துக்காசு போட்டால்.


அறுகோண வடிவ
இருபது காசு கூட
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டில் தான் கிடக்கிறது.


நாலணாவுக்கு
தபால் அலுவலக
வில்லை தான் கிடைக்கும்.


இந்த வரிசையில்
இடம்பெயரக் காத்திருக்கிறது
ஐம்பது காசும்.


ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்.
செல்லாக் காசுகள்
எல்லா இடத்திலும்
வழக்கொழியும்.


.

No comments:

Post a Comment