Wednesday, December 2, 2009

இன்றைய சிந்தனை



குறள்அமுதம்


பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
-திருவள்ளுவர்
(பிறன் இல் விழையாமை - 148)

2 comments:

செ.இளங்கோவன் said...

வள்ளுவர் கேடி.
அவர்காலத்தில் தமிழர்கள் பெருங்கேடிகள்.
அதனால்தான் பிறன்மனை நோக்காதடா என்று வள்ளுவர் 10 குறள்கள் எழுதும் அளவுக்கு தமிழர்கள் 'கற்பு'க்கரசர்களாக இருந்திருக்கின்றனர் என்பது
என் தாழ்மையான கருத்து.

வ.மு.முரளி. said...

மனிதன் வாழ (நிம்மதியாக வாழ) வழி வகுப்பவை சாத்திரங்கள். இவை மூன்று வகை: வழி காட்டுபவை, திருத்துபவை, தண்டிப்பவை.
மனிதன் பிறந்த போதே தவறுகளுடன் தான் பிறக்கிறான். மனிதர்கள் சேர்கையில் சமுதாயம் அமைகிறது. சமுதாயம் நிலை பெற, மனிதன் கட்டுக்குள் வைக்கப்பட, உயர் மானுடர்களால் சாத்திரங்கள் வகுக்கப்பட்டன.
வழிகாட்டும் நூல்களுக்கு திருக்குறள் உதாரணம். திருத்தும் நூல்களுக்கு சீவக சிந்தாமணி உதாரணம். தண்டிக்கும் நூல்களுக்கு மனுதர்மம் உதாரணம்.
'இந்தப் பாதையில் போகாதே' என்று கூறுவது வழி காட்டும் உத்தியே. பிறனில் விழையாமை அதிகாரம் போகக்கூடாத வழியை சொல்கிறது. அந்தக் காலத்தில் அப்படித்தான் இருந்தார்களா என்று கேட்பது, தற்கால தவறுகளை நியாயப் படுத்தவே உதவும்.
இது என் 'தாழ்மையான' கருத்து.

Post a Comment