பின்தொடர்பவர்கள்

Sunday, August 1, 2010

புதுக்கவிதை - 108கிரிக்கெட் அகராதி - 4
கிரிக்கெட் அணி
இணைந்து ஆடுவதாக
தோற்றம் தருவது;
மேலாளர், மருத்துவர் கொண்டது.

கிரிக்கெட் தொடர்
ஒரு மாதத்துக்கேனும்
சோற்றுக் கவலை மறக்கவைப்பது;
ஆண்டுக்கு 12 முறை நடப்பது.

கிரிக்கெட் விளம்பரதாரர்
வாழவைப்பதாகக் கூறி
வாழ்வதில் வல்லவர்;
விதிகளை இயக்குபவர்.

கிரிக்கெட் 3-வது நடுவர்
தீர்மானிக்க முடியாத
சிக்கல்களை அவிழ்க்க
விஞ்ஞானம் அளித்த பரபரப்பு உத்தி.
.

2 comments:

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க.... தொடர்ந்து விளையாடுங்க.

வ.மு.முரளி. said...

இது எனது புதிய முயற்சி. ஏற்கனவே அரசியல் அகராதி (05 .10 .2009 மற்றும் 06 .10 .2009 ), ஈழ ஹைக்கூ (20 .04 .2010 முதல் 16 .05 .2010 வரை௦) ஆகிய தலைப்புகளில் இதே முறையை முயற்சித்துள்ளேன். அவற்றையும் படிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்'கொல்கிறேன்'.

Post a Comment