பின்தொடர்பவர்கள்

Thursday, August 12, 2010

உருவக கவிதை - 57


ஊசல்


புரிபடாத படிமத்திற்கும்
மலினமான மடக்கு வரிகளுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.

புரிபடாத உருவகத்தைக் கொண்டாடும்
அறிவுலகத்துக்கும்,
எழுதுவதெல்லாம் கவியென்ற
எளியவர்களுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.


இரண்டும் வேண்டாம் என்ற
தனிப்பாட்டை
எனது.

காலத்தை வெல்வது தான் கவிதை.
காலம் பதில் சொல்லும்.
.

2 comments:

சுடர்விழி said...

கவிதையைப் பற்றிய உங்கள் கவிதை நன்று !!பாராட்டுக்கள் !

வ.மு.முரளி. said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி

Post a Comment