பின்தொடர்பவர்கள்

Monday, August 2, 2010

புதுக்கவிதை - 109கிரிக்கெட் அகராதி - 5
கிரிக்கெட் 'பிட்ச்'
ஆடத் தெரியாதவர்கள்
கோணல் என்று சொல்வது;
களிமண்ணால் ஆனது.

கிரிக்கெட் 'பிக்சிங்'
ஆட்டத்தின் போக்கை
முன்கூட்டியே தீர்மானிப்பது;
களிமண்கள் அறியாதது.

கிரிக்கெட் 'விக்கெட்'
பந்து வீசுபவர் குறி பார்ப்பது;
மட்டையாளர் பாதுகாப்பது;
வெற்றி பெற்றவர் பிடுங்கிச் செல்வது.

.

No comments:

Post a Comment