பின்தொடர்பவர்கள்

Wednesday, January 13, 2010

இன்றைய சிந்தனைகருவூலம்

...உணர்வின் அறைக்கதவை
ஒட்டத் திறந்துவைத்து
தன்னலத்தைக் கொளுத்தி
நீராக்கிப் பால் தெளிப்போம்.
நெஞ்சம் நெகிழ்ந்துவிடும்
வான் வீம்பு தளர்ந்துவிடும்.
ஆதலின்
பாரதத்தைப் பாழ்படுத்தும்
இன்மை எல்லாம் இல்லாது
புத்துலகம் பொங்கியெழும்
பொங்கலிடு தன்னலத்தை
பொங்கலிடு உள்ளுணர்வை.
- ந.பிச்சமூர்த்தி
(பிச்சமூர்த்தியின் கவிதைகள்)

.

2 comments:

Sangkavi said...

முரளி சார் எப்படி இருக்கறீங்க...

சார் நான் சங்கவி என்ற வலைப்பூவை தொடங்கி எதோ கிறுக்கீட்டு இருக்கேன்
நேரம் இருந்தால் நிச்சயம் பார்க்கவும்...

http://sangkavi.blogspot.com/

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
சங்கமேஸ்வரன்...

Va.Mu.Murali said...

அன்பு நண்பர் சதீஷ் குமாருக்கு,
வணக்கம்.
பலநாட்கள் கழித்து இணையம் வாயிலாக தொடர்பு கிட்டியதில் மகிழ்ச்சி.
உங்கள் வலைப்பூ கண்டேன்; ஆனந்தம் கொண்டேன்; இனி தொடர்வேன்.
எனது வலைப்பூக்கள்:
1. http://kuzhalumyazhum.blogspot.com
2. http://malarumvandum.blogspot.com
3. http;//panjapoothavanakkam.blogspot.com
உலகம் உருண்டை; நாம் எங்காவது சந்தித்துக் கொண்டே தான் இருப்போம். தற்போதைய சந்திப்பு, மூன்றாவது முறை. நமது நட்பு தொடரட்டும். உங்கள் எழுத்துக்கள் மெருகேற வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் பின்தொடர்வோருக்கும், குடும்பத்துக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-வ.மு.முரளி.

Post a Comment