Wednesday, January 13, 2010

மரபுக் கவிதை - 66



பொங்கல் பொலிக!

பொங்கல் பொலிக, நன்மை மிளிருக!
எங்கள் எண்ணம் சிறக்க!
சங்கத் தமிழின் வன்மை ஓங்கிட
மங்களம் எங்கும் மிகுக!
(பொங்கல்)
ஏழை, செல்வன், மாற்று மதத்தான்
என்பது இங்கே இல்லை!
வாழை, கொய்யா, மாம்பழம் எனினும்
வகையினில் பழங்கள் ஒன்றே!
(பொங்கல்)
வருடம் முழுதும் உழைத்துக் களைத்த
உழவர் களிக்கும் திருநாள்!
கரும்பும் நெல்லும் கனிகளும்
கதிரினை வணங்கும் பெருநாள்!
(பொங்கல்)
மாரண வீரர் விழுப்புண்ஏந்தி
காளையை அடக்கிடுகின்றா!
பாரத மண்ணின் பண்போடு கலந்த
பசுவை வணங்கிடுகின்றோம்!
(பொங்கல்)
பொங்கல் பொலிக, பொங்கல் பொலிக!
மங்களம் எங்கும் மிகுக!

குறிப்பு: நாளை மகர சங்கராந்தி - பொங்கல் திருநாள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
.

5 comments:

தமிழ் said...

இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

Anonymous said...

முரளி அண்ணா,

நீங்க ப்ளாக் எல்லாம் வெச்சு இருக்கீங்களா :) நானும் ரம்யாவும் இங்க யூ.கே ல சந்தோசமா இருக்கோம்..
முடிஞ்சா என்னோட ப்ளாக் படிச்சு பாருங்க ..

www.balavin.wordpress.com

பாலா (எ ) கணேஷ்.

வ.மு.முரளி. said...

கணேஷா இது? அருமை. இனிமை.
அன்புத் தம்பிக்கு, உன்னுடைய எழுத்து பொழுதுபோக்கு என்றாலும், உனது தேசம் கடந்த தனிமைக்கு மருந்து. இதைத் தொடர்ந்து செய். நானும் தொடர்கிறேன் உன்னை. சகதர்மிணிக்கும் என் வாழ்த்துக்கள்.
-வ.மு.முரளி.

வ.மு.முரளி. said...

நன்றி திகழ் நண்பரே!
உங்கள் http://pure-tamil-words.blogspot.com/ அருமை

வ.மு.முரளி. said...

உலவு நண்பருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment