பின்தொடர்பவர்கள்

Wednesday, January 20, 2010

மரபுக் கவிதை - 69


தினமலரின் கொள்கை

வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும்
சேர்ந்தால் தான் செய்தி -அது
கிழக்கு வெளுக்கும் முன்னே கிடைத்தால்
மக்களுக்கும் திருப்தி!

உள்ளூர், வெளியூர், தேசம், உலகம்
உணர்த்துவதே செய்தி - அது
உடனே கிடைத்து அறிவு வளர்ந்தால்
உருவாகும் மகிழ்ச்சி!

நாட்டுநலன் தான் முக்கியம் என்று
நாட்டுவதே செய்தி - அது
வாட்டம் மிகுந்த ஏழைகள் துயரைத்
தீர்த்தால் மிக திருப்தி!

பொன்விழா கண்ட தினமலருக்கு
இவை தானே கொள்கை- இதைக்
கண்ணென வழங்கிய டி.வி.ஆரின்
நினைவே நம் பெருமை!

நன்றி: தினமலர் (ஈரோடு - 23.09.2001)
தினமலர் (கோவை, சென்னை - 21.12.2008)
.

2 comments:

Sangkavi said...

இந்த கொள்கை இன்றும் நடைமுறையில் இருக்கிறதா நண்பரே...

Va.Mu.Murali said...

இருக்க வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. நாம் ஆக்கப்பூர்வமாக சிந்திப்போமே!
(எனது பணிவிலகலை அடுத்து, தினமலரில் இருந்து நான் நேற்று விடுவிக்கப்பட்டேன். நன்றியுணர்வின் அடிப்படையில், இக்கவிதை மீள்பிரசுரம் செய்யப்பட்டது, நண்பரே)

Post a Comment