விவேகானந்தர்
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்
கட்டான உடலழகர் விவேகானந்தர்
நாவினிய சொல் படைத்தார் விவேகானந்தர்
நல்ல மனம் கொண்டவராம் விவேகானந்தர்
இந்துக்களின் பெருமை சொன்ன விவேகானந்தர்
இந்தியாவைச் சுற்றியவர் விவேகானந்தர்
குரு பெயரால் மடம் அமைத்தார் விவேகானந்தர்
குன்றாத மணிவிளக்கு விவேகானந்தர்
நேரான பார்வை கொண்ட விவேகானந்தர்
நேசித்தார் அனைவரையும் விவேகானந்தர்
வீரத்தை வேண்டியவர் விவேகானந்தர்
விழிகளிலே அருள் மிளிரும் விவேகானந்தர்
சிறப்பான செயல் புரிந்தார் விவேகானந்தர்
சிறுமை கண்டு பொங்கியவர் விவேகானந்தர்
பாரதத்தின் தவப்புதல்வன் விவேகானந்தர்
பண்பாட்டின் மறு உருவம் விவேகானந்தர்
காவியுடை அணிந்திருப்பார் விவேகானந்தர்
கடவுளுக்குப் பிரியமான விவேகானந்தர்!
நன்றி: விஜயபாரதம்
குறிப்பு: இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் (1863)
.
2 comments:
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்
நன்றி நண்பரே!
'சங்கராந்தி' என்பது புதிய மாற்றத்தின் அறிகுறி. வரும் தை மாதம், புத்துணர்வையும், நல்லாற்றலையும் அனைவருக்கும் நல்கட்டும்! தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கலை நாமும் கொண்டாடுவோம். இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
Post a Comment