பின்தொடர்பவர்கள்

Tuesday, September 21, 2010

புதுக்கவிதை - 118


பழி ஓரிடம்...பித்தமா, நலக்குறைவா?
சாளரத்தை எக்கி
முதியவர் திணறல்.

குமட்டலுடன் வீச்சம்
பரவும் பேருந்தில்
பல முகங்களில் அசூயை.

பயணிகள் எவருக்கும்
மதுக்கடைகள் மட்டுமே
கிடைக்கின்றன சபிக்க.

.

No comments:

Post a Comment