Tuesday, July 27, 2010

உருவக கவிதை - 54



வெறுமையின் அமைதி




சில நேரங்களில் வெறுமை கோலோச்சுகையில்
காகிதம் வெண்மையாகி விடுகிறது.
எழுத்துக்களற்ற வெற்றுக் காகிதங்களின் சத்தம்-
அமைதியற்ற மனதின் ஆழமான ஓலம்.

மதியவேளையில் ஈனசுரத்தில் கரையும் காகம் போல,
நடுநிசியில் எங்கோ ஊளையிடும் நாய் போல,
பனிக்கால அதிகாலையில் ஒலிக்கும் சேகண்டி போல,
மயானத்தில் புலம்பும் வெட்டியானின் பாடல் போல,
மனதைப் பிசையும் காகிதங்களின் கூக்குரல்.

வெறுமையும் அமைதியின்மையும்
தனக்குள் ஒளித்துள்ள கனலை,
வெடிக்கும்போது தான் உணர இயலும்.

காகிதங்களில் புதையும் எழுத்துக்களில்
இந்த கூக்குரலின் அடிநாதம் எதிரொலிக்கும்.
.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

அமைதியின் பேரோசையை ஆழமாகவும் சத்தமாகவும் சொல்லும் கவிதை..

அருமை நண்பா..
தொடர்ந்து எழுதுங்கள்..

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு நயம் தோயும் கவிதை..
அழகு!

Post a Comment