பின்தொடர்பவர்கள்

Sunday, July 25, 2010

மரபுக் கவிதை -103குரு வணக்கம்அன்புடன் நிழல் தரும் அரியநல் தருவே!
அகந்தையை நீக்கி அருளிடும் கதிரே!
அஞ்ஞானம் போக்கும் அறிவுத் திருவே!
மெய்ஞானம் நல்கும் விஞ்ஞான விரிவே!
உத்திகள் மனதினில் உரைத்திடு கருவே!
புத்தி தெளிந்திட புகட்டிய மருந்தே!
கண்ணுக்குத் தெரியாத இறைவனின் உருவே!
கருணை பொழிந்திடும் கார்மேக வடிவே!
மனத்தினில் நின்று காத்திடும் குருவே
மாதவம் படைத்திட அருளிடுவாயே!

(இன்று குரு பூர்ணிமா)

.

No comments:

Post a Comment