பின்தொடர்பவர்கள்

Friday, July 23, 2010

புதுக்கவிதை - 104தற்காலிகக் குடில்நதியை தூய்மைப்படுத்த
ஆயிரம் கோடியில் திட்டம்.
கரையோரக் குடிசைகள்
உடனடியாக அகற்றம்.

அதே இடத்தில் அழகிய
படித்துறை, படகுத்துறை
அமைக்க வரைபடம் தயார்.
ஒப்பந்ததாரரும் ஏற்கனவே தயார்.


நதிக்குள் வந்துவிழும்
சாக்கடைக் கழிவுநீரை
தடுத்துவிட்டால் போதும்.
துவக்கிவிடலாம் திட்டம்.

அதுவரை -
வாங்கிய படகை வைக்க
கரையோரமே ஒரு குடில்
அமைத்தல் போயிற்று...
.

No comments:

Post a Comment