பின்தொடர்பவர்கள்

Thursday, July 8, 2010

உருவக கவிதை - 52
வாழ்க்கைப் பந்துஅணிகளுக்குத் தான்
வெற்றி தோல்வி-
உதைபடும் பந்துக்கல்ல.

இலக்கில் சேர்வதும்
தடுக்கப்படுவதும்
பந்தின் தீர்மானத்திலில்லை.

விளையாட்டு சாதனம்
விளையாட இயலாது.
விளையாட்டல்ல வாழ்க்கை.


.

No comments:

Post a Comment