Thursday, July 29, 2010

புதுக்கவிதை - 105



கிரிக்கெட் அகராதி...1





கிரிக்கெட் போட்டி
ஒவ்வொரு அணியிலும்
11 அதிர்ஷ்டசாலிகள் ஆடும் ஆட்டம்
11 ஆயிரம் கிறுக்கர்கள் பார்த்து ரசிப்பது.

கிரிக்கெட் ரசிகர்
வீரர்களின் வருமானம் தவிர
எல்லா விபரங்களும் அறிந்தவர்.
விசில் அடித்தே வீணானவர்.

கிரிக்கெட் வீரர்
அதிர்ஷ்டக்காற்று அடித்தால் 'ஆறு';
எதிரணிக்கு காற்றானால் 'வாத்து'
சொக்கவைக்கும் சொக்கட்டான்.

கிரிக்கெட் தேர்வுக்குழு
ஆதிக்கவாதிகளின் கோட்டை;
அரசியல் விளையாடும்
அற்புதமான மைதானம்.

கிரிக்கெட் சங்கம்
கிறுக்கர்கள் ரசிக்கும் வகையில்
சூதாட்டத்தை நேர்த்தியாக
நடத்தும் நிறுவனம்.

கிரிக்கெட் ஒளிபரப்பு
கோடிகளைக் கொட்டி
வாங்கிய அரங்கம்.
கோடிகளாகக் கொட்டும் சுரங்கம்.

கிரிக்கெட் செய்தி
வாசகரையும்
முட்டாளாக்கும்
புள்ளிவிபரப் பந்தல்.
.

2 comments:

Anonymous said...

//ஒவ்வொரு அணியிலும்
11 அதிர்ஷ்டசாலிகள் ஆடும் ஆட்டம்
11 ஆயிரம் கிறுக்கர்கள் பார்த்து ரசிப்பது.//

இதை எப்படி கவிதை என்று சொல்றீங்க....இது ஒரு மேனாட்டு அறிஞர் சொன்னது....

வ.மு.முரளி. said...

11 'முட்டாள்கள்' ஆடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிப்பது என்று தான் அந்த மேனாட்டு அறிஞர் கூறியிருக்கிறார் நண்பரே.

Post a Comment