பின்தொடர்பவர்கள்

Tuesday, June 15, 2010

உருவக கவிதை - 45


செம்மொழி மாநாட்டை நோக்கி...15

குரங்கும் மருந்தும்


குரங்கை நினையாமல்
மருந்தை அருந்தினால்
குணமாகும் நோயென்ற
கதை ஒன்று உண்டு.

தெருவில் திரியும்
யாசகர்கள், நோயாளிகள்,
பிராந்துகளை நோக்குந்தோறும்
முள்வேலி முகாம்
நினைவில் வந்து தொலைக்கிறது.

ஈழத்தமிழ் வியாதியை
செம்மொழித் தமிழ் மருந்து
போக்குமா?

இதற்காகவேனும்
யார் கண்ணிலும் படாமல்
யாசகர்களை போஷியுங்கள்!
புண்ணிய காரியம் பாவம் போக்கும்-
எண்ணிய காரியம் கைகூடாவிடிலும்.
.


1 comment:

கோவை மு.சரளா said...

சாட்டை வரிகள் அடி வாங்குபவர்களுக்கு வலிக்கிறதோ இல்லையோ அடிப்பவர்கள் மனதில் வலி இருக்கிறது .................அருமையான உணர்வு பதிவு வாழ்த்துக்கள் ..............

Post a Comment