பின்தொடர்பவர்கள்

Wednesday, June 9, 2010

வசன கவிதை -63

செம்மொழி மாநாட்டை நோக்கி...9பேரணி பொம்மைகள்கன்றுக்காக மகனைக் கொன்றது
அந்தக் காலம்;
மகனுக்காக மதுரை எரிந்தது
இந்தக் காலம்.

நட்புக்காக வடக்கிருந்தது
அந்தக் காலம்;
பதவிக்காக 'வடக்'கிருப்பது
இந்தக் காலம்.

புறாவுக்காக தசை அளித்தது
அந்தக் காலம்;
விழாக்களில் சதை ஆடுவது
இந்தக் காலம்.

முல்லைக்கு தேர் ஈந்தது
அந்தக் காலம்;
முதல்வரை பாரி என்பது
இந்தக் காலம்.

மயிலுக்கு போர்வை தந்தது
அந்தக் காலம்;
மக்களுக்கு பணம் தருவது
இந்தக் காலம்.

நெறி தவறின் உயிர் நீப்பது
அந்தக் காலம்.
நெறி தவறி உயிர் எடுப்பது
இந்தக் காலம்.

வாழ்வுக்கு வழி காட்டியது
அந்தக் காலம்;
இவற்றை பேரணியில்
பொம்மைகள் ஆக்குவது
இந்தக் காலம்.
.

3 comments:

சி. கருணாகரசு said...

நச்!

சி. கருணாகரசு said...

முழுக்கவிதையும் மிக அருமை.
பாராட்டுக்கள்.

arun said...

மிக அருமையான கவிதை.இப்படி ஒரு கவிதையை எழுத நினைத்த தங்கள் வீரத்தையும் கண்டு என் மனம் பாராட்ட விழைகிறது - அருண் , மணிலா , பிலிப்பைன்ஸ் .

Post a Comment