Tuesday, October 5, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
-அருட்பிரகாச வள்ளலார்
(திரு அருட்பா- முதல் திருமுறை:8)
.
குறிப்பு: இன்று வள்ளலார் பிறந்த தினம் (1856).
.

1 comment:

செ.இளங்கோவன் said...

இருட்சாதி சமயமெலாம் எருவாக்கிப்போட்டு
கண்மூடிப்பழக்கமெலாம் மண்மூடிப்போக

Post a Comment