பின்தொடர்பவர்கள்

Monday, October 11, 2010

வசன கவிதை - 79


கனவான காவல்பணி


இன்னும் ஓரடி குறைவாக இருந்தாலும்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்;
வழிமுறை தெரியாமல் வகையாக
இப்படி மாட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

தலையில் தேங்காய் மட்டை வைத்து
உயரம் அதிகரித்திருக்கத் தேவையில்லை.
'போலீஸ் ஆகும் முன்பே போர்ஜரி' என்று
செய்தியாகாமல் இருந்திருக்கலாம்.

காவல்துறையில் நுழைய வேறு வழியா இல்லை?
இப்படி பத்திரிகையில் படம் வெளியாகி
பிரபலமாவதற்கு பதிலாக
கவனிக்க வேண்டியவர்களை கவனித்திருக்கலாம்.

அஞ்சாமல் வேடம் போட்டதற்கு பதிலாக
'அஞ்சாதே' படம் பார்த்திருக்கலாம்-
காவல்துறை கனவில், அதீத ஆர்வத்தில்
திருடனாக மாற வேண்டியிருந்திருக்காது.

இயக்குனர் மிஷ்கினுக்கு ஒரு வேண்டுகோள்:
அஞ்சாதே - இரண்டாம் பாகத்திற்கு கதை தயார்.
பரிதாபத்திற்குரிய அந்த இளைஞரின் முடி உரித்து
பரவசப்படும் ஊடகங்கள் இருக்கின்றன கருவாக.

இதர தமிழ்த் திரைப்பட சிற்பிகளுக்கு வேண்டுகோள்:
கஞ்சா மயக்கத்தில் இருப்பவரும்
திடீர் காவல் அதிகாரி ஆவதுபோல இனியேனும்
படம் எடுக்காதீர்கள்- வாழ்க்கை வியாபாரமல்ல.
.
.

14 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றாக இருக்கிறது.

பிரபா said...

vazhthukkal nanpare.............
thodarnthum thodarkiren.

goma said...

என்ன ஒரு விபரீதமான முயற்சி...இப்படித் தேர்வானவன் நாணயமான காவலனாக இருப்பானா

பழமைபேசி said...

ப்ச்...

தொடர்ந்து எழுதுங்கள்!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//அஞ்சாமல் வேடம் போட்டதற்கு பதிலாக
'அஞ்சாதே' படம் பார்த்திருக்கலாம்-
காவல்துறை கனவில், அதீத ஆர்வத்தில்
திருடனாக மாற வேண்டியிருந்திருக்காது.////////

வலியும் , வருத்தமும் வார்த்தைகளில் தெரிகிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

ஆனந்தி.. said...

முரளி..ஒரு பக்கம் அந்த ஆளு ஏமாத்தினாலும்..காவல்துறையில் சேர சில விதிமுறைகளையும் நீக்கலாம்..ஒருவேளை அந்த ஆள் நிஜமாகவே போலீஸ் வேலையில் எப்படியாவது சேர்ந்து நல்லா பண்ணலாம் கூட யோசிசுருக்கலாம்..என்னவோ அந்த அளவுக்கு எல்லா விஷயத்திலும் மலிவாயடுச்சு பித்தலாட்டு..

SanjaiGandhi™ said...

நல்லா இருக்கு முரளி.. ஆனால் என்னைப் போன்ற சராசரி ரசிகனுக்கு சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே..

கே.ஆர்.பி.செந்தில் said...

நக்கல் பாணியில் கவிதை அருமை

யாதவன் said...

மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்
--

வினோ said...

/வாழ்க்கை வியாபாரமல்ல./

எங்க கேட்கிறாங்க?

hari said...

Correct ah Sonneeenga na

VELU.G said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

V.Radhakrishnan said...

வித்தியாசமாக இருக்கிறது. வாழ்க்கை வியாபாரமல்ல. வாழ்க்கை பெரும் பாரம்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு..வாழ்த்துக்கள்

Post a Comment