Wednesday, March 23, 2011

உருவக கவிதை - 65



அஸ்தியில்

கனவுகள்

கலப்போம்!






உறையாத ரத்தத்தின்

வாசம் எங்கும்.

வெடிக்காத குண்டின்

நெடி இன்னமும்.

வெல்லாத போரின்

வருத்தும் நினைவுகள்

என்றும் எங்கும்.



தூக்குக் கயிற்றை

முத்தமிட்ட இளைஞர்களின்

இறுதி ஆசைகள்

நிறைவேறாத கனவுகள்.

விடுதலை வேள்வியில்

ஆகுதியான வீரர்களின்

சாம்பல் மீது எழுந்த

கட்டடம் சரிகிறது.



சாம்பலின் வீரியம் உணராமல்

கற்களைப் பிணைத்த

அரசியல் கலவையால்...

ரசமட்டம் தவிர்த்த மேதமையால்...

சரியும் கட்டடத்திற்கு

காரணமாயிரம்.


இப்போதும் கட்டடத்தைக் காப்பாற்றலாம்-

அஸ்திவாரத்தில்

அவர்களது கனவுகளைக் கலந்தால்.



இன்று: மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயனை எதிர்த்து தூக்குமேடை ஏறிய நாள்.

1 comment:

thara said...

இந்திய விடுதலைக்காகப் போராடிய எத்தனையோ இளம் போராளிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் மாவீரன் பகத்சிங் ஆவார். அவரைப் பற்றி நீங்கள் வடித்த கவிதை வரிகள் மிகவும் அருமையிலும் அருமை! உங்கள் கவிதை வரிகள் நிச்சயம் இளம் தலைமுறையினருக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எஸ். காமராஜ்.

Post a Comment