Saturday, February 19, 2011

மரபுக் கவிதை - 110



தமிழ்த் தாத்தா பஞ்சகம்


தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.

ஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு
பாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை
பாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட
தூதர் தமிழ்த்தாத்தா தான்.

தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த
சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
வாழ்வே தமிழ்த்தாத்தா தான்.

வாய்ச்சொல்லில் வீரரென வாழ்ந்தோரின் மத்தியிலே
ஆய்ச்சியர் குரவையும் அணித்தமிழ் இலக்கணமும்
பரவும் தமிழிசையின் பெருமிதத்தை ஊட்டியநல்
குருவே தமிழ்த்தாத்தா தான்.

ஆரணங்காம் தமிழ்த்தாயின் ஆபரண மானபெரும்
பூரணத்தின் மணித்திரளாம் புத்திளமை பூத்திருக்கும்
மங்காத இலக்கியங்கள் மாயாமல் காத்தவரே
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.
..
இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்.
.

4 comments:

பொன் மாலை பொழுது said...

தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் ஆஷாட பூதிகள் எல்லாம் எந்த சினிமா நடிகையின் தொடையின் இடுக்கில் நுழைத்தார்கள்?
எந்த ஒரு நாய்க்கும் தமிழ் தாத்தா உ .வே.சா. பற்றி தெரியுமா?
என் கோபத்தை பொறுத்தருளவும் பதிவரே !வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

கிருஷ்ண மூர்த்தி S said...

அன்பின் திரு முரளி!

உங்கள் தமிழ்த் தாத்தா பஞ்சகத்தைத் தமிழ்வாசல் கூகுளே வலைக்குழுமத்திலும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நன்றி.

https://groups.google.com/group/thamizhvaasal/browse_thread/thread/3de6559f649b6ad0?hl=en#

வ.மு.முரளி. said...

அன்பு நண்பர் கிருஷ்ணமுர்திக்கு
நன்றி.

வ.மு.முரளி. said...

அன்பு நண்பர் கக்கு மாணிக்கம்,

தங்கள் கோபம் நியாயமே. ஆனால், அவர்களைப் பற்றி நினைத்தாலே அவைகள் போலத் தான் ஆகா வேண்டுமா? நாம் சற்று வித்யாசமாக சிந்திப்போமே.

Post a Comment