பின்தொடர்பவர்கள்

Monday, December 20, 2010

புதுக்கவிதை - 139


தேடலின்
அருகில்...


கள்ள நோட்டு கிருஷ்ணன்கள்...
ஹரிதாஸ் முந்திராக்கள்...
ருஸ்தம் நகர்வாலாக்கள்...
கோபால கிருஷ்ணன்கள்...
ஒட்டாவியோ குவாட்ரோச்சிகள்...
கேதன் பரேக்குகள்...
அப்துல் கரீம் தேல்கிகள்...
சத்யம் ராஜுக்கள்...
நீரா ராடியாக்கள்...
ஆண்டிமுத்து ராசாக்கள்...

பட்டியல் தொடரும்...
கைதுகள் தொடரும்...
பங்கிட்டவர்கள் மட்டும்
சிக்குவதில்லை என்றும்.

எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறது
மத்தியப் புலனாய்வு அமைப்பு...
அடி, முடி தெரியாத ஊழலின் பிறப்பிடத்தை...
அருகில் வைத்துக்கொண்டே.
.

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

சட்டங்கள் சரியில்லை. அரசியல்வாதிகளுக்குச் சரியான தண்டனை கொடுப்பதில்லை நம் சட்டம். ஆண்டிமுத்து ராசாவில் இரு கைகளையும் இன்றே வெட்டி எறியுங்கள். அடுத்தவன் பயப்பட ஆரம்பிப்பான்.

Post a Comment