பின்தொடர்பவர்கள்

Wednesday, December 15, 2010

புதுக்கவிதை- 138


கவிதையின் நியாயம்


கைகளில் ஏந்தி இருக்கையில்
இளஞ்சூடாக மூத்திரம் கழிக்கும்
சிசுவை விடவா கவிதை பெரிது?

யாரேனும் எடுப்பதற்காக சிணுங்கும்
சிசுவின் அழுகையை விடவா
எழுதப்படும் கவிதை அழகு?

எங்கோ பார்த்தபடி இதழில் விரியும்
புன்னகையை மறுநிமிடமே மறைக்கும்
சிசுவின் நினைவல்லவா கவிதை?

வலைப்பூவில் எழுத மறந்த
கவிதைகளை விட,
சிசுவின் நறுமணம் பெரிது.

கவிதையை எப்போதும் எழுதலாம்.
சிசுவை இப்போதே கொஞ்ச வேண்டும்...
இப்போதே ரசிக்க வேண்டும்.

தாலாட்ட வேண்டியவன் சில நாட்களுக்கு
வலைப்பூவை மறந்துவிட
வேண்டியது தான்.
.

4 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை

VELU.G said...

நல்லாயிருக்குங்க நண்பரே

அரசன் said...

அருமை.... நெகிழ்வான வரிகள்

வ.மு.முரளி. said...

பாராட்டிய நண்பர்கள் முனைவர் குணசீலன், ஜி.வேலு, அரசன் ஆகியோருக்கு நன்றி.

Post a Comment