பின்தொடர்பவர்கள்

Tuesday, June 12, 2012

புரிந்தும் புரியாமலும்...

பக்கத்து நாட்டில் குண்டு வெடித்தால்
அது சேதி.
பக்கத்து ஊரில் குண்டு வெடித்தால்
அது பீதி.
பக்கத்திலேயே குண்டு வெடித்தாலேனும்
கிடைக்குமா  நீதி?

கடல் கடந்த சகோதரன் கதறினால்
நமக்கு வேடிக்கை.
அண்டை மாநில சகோதரன் அலறினால்
நமக்கு வாடிக்கை.
மாநாடு கூட்டினால் தீர்ந்தது- 
முழங்குவோம் கோரிக்கை.

வசனங்களில் வாழும் தலைமுறையாக
சபிக்கப்பட்டவர்களுக்கு
விசனங்களில் வீழும் சொந்தங்களைப் பற்றி
சிந்திக்க இல்லை நேரம்.
பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.

.

5 comments:

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...டெஸோ மாநாடு கூட்டும் சந்தர்ப்பவாதிகளை தமிழால் சபித்திருக்கிறீர்கள்.
இது போன்ற சாபங்கள் அவர்களுக்கு நிறைய கொடுக்கப்பட வேண்டும்.

கோவை மு.சரளா said...

வார்த்தைகளின் ஜாலத்தில் ஒரு வசவு .............கண்முன் நிகழும் கொடூரம் கை கட்டி நிற்க சொல்லி ஆணை என்ன செய்ய நமக்கு வந்தால் மட்டுமே கட்டை அவிப்போம் .............ஆதங்கம் எனக்குள்ளும் இருக்கிறது

Sasi Kala said...

பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.
நறுக்கென சுடும் வரிகள் .

கோவி said...

கவிதை அருமை.. ஈழம் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்பவன்..

வ.மு.முரளி. said...

பின்னூட்ட நண்பர்கள் கோவி, சசிகலா, கோவை மு.சரளா, உலக சினிமா ரசிகன் ஆகியோருக்கு நன்றி. "தூரம்'' குறையட்டும்!

Post a Comment