பின்தொடர்பவர்கள்

Tuesday, January 3, 2012

புதுக்கவிதை - 145பாவம் காவலர்!

தெருநாய்களும் முடங்கியிருக்கும்
பனி பொழியும் இரவு...

வளைகளிலிருந்து வெளிவர
பெருச்சாளிகளும் அஞ்சும் கடுங்குளிர்.

முச்சந்தியில்
சாக்கடை தூர்வாரிக் குவித்த
கூளங்களின் அருகே,
மல்லாந்து கிடக்கிறான்
வேட்டி அவிழ்ந்த
போதை ஆசாமி.

லத்தியால் அவனை
தட்டிப் பார்க்கிறார்
இரவுரோந்துக் காவலர்.No comments:

Post a Comment