Saturday, January 14, 2012

புதுக்கவிதை - 146




எரிக்கப்படாத குப்பைகள்...

பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.

வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.

போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்  
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.

உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.

1 comment:

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி

//ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம் உணராமல்
எதை எதையோ எரித்து.//

அருமையான வரிகள்

Post a Comment