பின்தொடர்பவர்கள்

Friday, March 23, 2012

உருவக கவிதை - 65


அஸ்தியில் கனவுகள் கலப்போம்!

உறையாத ரத்தத்தின்
வாசம் எங்கும்.
வெடிக்காத குண்டின்
நெடி இன்னமும்.
வெல்லாத போரின் நினைவுகள்
என்றும் எங்கும்.

தூக்குக் கயிறை
முத்தமிட்ட இளைஞர்களின்
இறுதி ஆசைகள்
நிறைவேறாத கனவுகள்.
விடுதலை வேள்வியில்
ஆகுதியான வீரர்களின்
சாம்பல் மீது எழுந்த
கட்டடம் சரிகிறது.

சாம்பலின் வீரியம் உணராமல்
கற்களைப் பிணைத்த
அரசியல் கலவையால்...
ரசமட்டம் தவிர்த்த
சுயநலமிகளின் மேதமையால்...
சரியும் கட்டடத்திற்கு
காரணமாயிரம்.

இப்போதும்
கட்டடத்தைக் காப்பாற்றலாம் -
அஸ்திவாரத்தில்
அவர்களது கனவுகளைக் கலந்தால்.(இன்று மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நாட்டிற்காக உயிர் நீத்த தினம்)

.
மீண்டும் பதிவிடப்படும் பதிவுNo comments:

Post a Comment