பின்தொடர்பவர்கள்

Friday, May 18, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் - ஓர் இணைய (இனிய) உதயம்அன்பான நண்பர்களுக்கு,

வணக்கம்.  

கோவை வட்டாரத்தில் இயங்கும் வலைப்பதிவர்கள் இணையும் வகையில், 'கோவை பதிவர்கள்' என்ற இணைப்பகமும், ஓர் குழுமமும் துவங்கி  உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தக் குழுமத்திலும் இணைப்பகத்திலும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி  கொள்கிறேன். 

சில பத்திரிகைகளைத் தவிர, பெரும்பாலான ஊடகத் துறை ஆதிக்க சக்திகளின்  வசமாகி உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களின் பொறுப்பு கூடுகிறது. நாட்டைக் காக்க ஐந்தாவது தூணாக உள்ள ஊடகம் வழிதவறும் நிலையில், தன்னிச்சையான ஆர்வலர்களின் ஊக்கமூட்டும் எழுத்தாக்கங்களே  நாட்டைக் காக்க முடியும். அந்த வகையில்,  'கோவை பதிவர்கள்' இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வலைப்பூக்களை வெட்டி அரட்டைகளுக்குப் பயன்படுத்தாமல், சுய முன்னேற்றத்துக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் உதவுவதாக  கட்டமைப்போம்.

இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் என்றும் உண்டு. இதனை எனக்கு அறிமுகப் படுத்திய நண்பர் திரு. சங்கவிக்கு நன்றி. 

தொடர்புக்கு: http://www.kovaibloggers.in/ 


3 comments:

சம்பத்குமார் said...

அன்பின் முரளி அண்ணா

நட்பால் ஒன்றிணைவோம்.

நன்றி
சம்பத்குமார்

கோவை மு.சரளா said...

உங்கள் எண்களின் வழியே நிச்சயம் நல்ல உள்ளங்கள் பயணிக்கும் நானும் அதில் பயணிப்பதில் மகிழ்ச்சி ..........

கோவை மு.சரளா said...

உங்கள் எண்ணங்களின் வழியே நிச்சயம் நல்ல உள்ளங்கள் பயணிக்கும் நானும் அதில் பயணிப்பதில் மகிழ்ச்சி ..........

Post a Comment