திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
சமஸ்டோரி
-
எனது முகநூல் பக்கத்தில், தமிழக ஊடகங்களின் அவலநிலை குறித்த 4 பகுதிகள் கொண்ட
குறுந்தொடரை, நண்பர் சமஸ் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அக். 17 முதல்
அக். 23 ...
1 week ago

