உட்பகை
சொல்லுக நற்சொல் சொல்லிய பின்னர்
எண்ணுக அதனை என்றும் நண்ணுக!
அல்லவைசொல்லின் அப்புறம் துன்பம்
அன்புறு பதத்தை அள்ளிக் கொள்ளுக!
தள்ளுக வன்சொல் தள்ளிடு முன்னர்
எண்ணுக இனிதை என்றும் மன்னுக!
உள்ளவை சொல்லின் உற்றது இன்பம்
உள்ளக மதத்தை உட்பகை என்க
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
1 week ago
No comments:
Post a Comment