திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!
-
சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று
தெரிவதில்லை. பூர்வஜன்ம பந்தமாக இருக்கலாம். அப்படி என்னை முதல் சந்திப்பிலேயே
ஆகர்ஷித்தவர் நம...
5 weeks ago
