Showing posts with label பூனை. Show all posts
Showing posts with label பூனை. Show all posts

Tuesday, November 17, 2009

மரபுக் கவிதை - 50



பூனை


பஞ்சென ஸ்பரிஸ மென்மை
பாலெனத் தூய வெண்மை.
துஞ்சுதல் அற்ற கண்கள்
தூய்மையை நாடும் உள்ளம்.
அஞ்சிடுமாறு கீறும்
ஆணியே நகங்களாகும்.
வஞ்சகம் அற்ற வாழ்வு
வாலிலே நடனமாடும்.
நஞ்சையும் ஜீரணித்து
நாவினால் அருகு மெல்லும்.
கொஞ்சிடு விறைத்த காது
கோபமோ உறுமும்போது.
சஞ்சலமின்றி வேட்டை
சாகசங் காட்டி ஓடும்.
வெஞ்சினம் வந்துவிட்டால்
வேங்கையாய்க் கூரும் பற்கள்.
ரஞ்சகமான தோற்றம்
ராகமாய்ப் பாடிக் கூவும்.
நெஞ்சிலே கொண்ட அன்பு
நேசமே பூனை ஆகும்.

.

Wednesday, September 2, 2009

புதுக்கவிதை 1


பூனைக்குட்டி போல!

பால் பூத்தில் சுகமாகத் தூங்குகிறது பூனைக்குட்டி-
பாம்பையும் கிழிக்கும் நகங்களை மறந்து.
பசி இல்லாததால் ருசியும் இல்லை-
பதற்றம் இல்லை; வாலாட்டும் பரபரப்பு இல்லை.
சக்கைப் பாலைக் குடித்துக் குடித்து
எலிவேட்டை ஆடும் வேட்கை மறந்தது.
இருளிலும் ஒளிரும் கண்களை மூடி
நிஜமாகவே தூங்குகிறது பூனைக் குட்டி.
பக்கத்திலேயே பால் பாத்திரம் இருப்பதால்,
தன்னியல்பு மறந்து தூங்குகிறது பூனைக் குட்டி-
பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் கவிஞனைப் போல.

நன்றி: vijayabharatham